டீசல் டோர் டெலிவரி: இந்தியன் ஆயில் அறிவிப்பு

Image result for இந்தியன் ஆயில்இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் டீசலை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் வீட்டிற்கே வந்து டீசல் விற்கும் டோர் டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது.

டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் வீதிகளில் வலம் வரும். மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் முதலில் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை, விரைவில் பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்த சேவை டீசலுக்கு மட்டும்தான். இதன் மூலம் பேருந்து, டிரக் உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்களுக்கு நேரம் மற்றும் பணம் மிச்சப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியுள்ளது.Image result for இந்தியன் ஆயில்