சென்னையில் சிக்கிய மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள்-செயின் பறிப்பவர்களுக்கு போதையூட்டும் மருந்து விற்பனை:

Image result for நகை திருட்டுசெயின் பறிப்பவர்கள் குரூரமாக, இரக்கமின்றி செயல்பட போதைப் பழக்கத்திற்காகப் பயன்படுத்தும் ஒருவகை மருந்தை விற்பனை செய்ததாக சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மெடிக்கல் ஷாப் உரிமையாளர்கள் சிக்கினர்.

சென்னையில் சமீப காலமாக போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் பெரிய தலைவலியாக இருப்பது செயின் மற்றும் செல்போன் பறிப்பாளர்களே. அதிலும் செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதும் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.

இப்படி செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பெரும்பாலும் இரக்கமற்றவர்களாக இருக்கின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும்போது பெண்கள் கீழே விழுந்தாலும் செயினைப் பறிப்பதில் மட்டுமே குறிக்கோளாக இருப்பர்.

சமீபத்தில் குன்றத்தூரிலும், கோயம்பேட்டிலும் பெண்கள் கீழே விழுந்தும் இழுத்துச் செல்லப்பட்டது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று வேலூரில் செயினைப் பறிக்கும் முயற்சியில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.Image result for நகை திருட்டு

இது போன்ற சந்தர்ப்பங்களில் குரூரமாக துணிச்சலுடன் எப்படி இவர்களால் செயல்பட முடிகிறது என்று செயின் பறிப்புக் குற்றவாளிகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை வெளியானது.

பெரும்பாலான குற்றவாளிகள் கஞ்சா போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அதைவிட போதை தரக்கூடிய ஒரு மருந்து பற்றி அவர்கள் போலீஸரிடம் தெரிவித்தனர். இதை நாங்கள் வாங்கி சாப்பிடும்போது உடம்பில் ஒரு மதமதப்பு வரும், முறுக்கி விட்டது போல் இருக்கும், எதைப்பற்றியும் கவலை இருக்காது என்று கூறியுள்ளனர்.

அதென்ன போதை மருந்து என்று விசாரித்ததில், அது ஒரு இருமலுக்கு சாப்பிடும் மருந்து சார், ஆனால் அதை ஒரு மூடி சாப்பிட்டாலே தூக்கம் வரும். நாங்கள் ஒரு வேலைக்கு ஒரு பாட்டிலை குடிப்போம், சும்மா காற்றில் பறப்பது போல் இருக்கும், உடம்பு முறுக்கிவிட்டது போல் இருக்கும், செயின் பறிக்கும் முன் ஒரு பாட்டில் மருந்தைக் குடித்துவிட்டுக் கிளம்புவோம்.Image result for நகை திருட்டு பைக்

இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. இதற்காக தனியாக மருந்து மட்டும் வாங்கி விற்கும் கடைகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ளன என்றும் அவற்றை மொத்தமாக வாங்கி தங்களுக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் இரண்டு மெடிக்கல் ஷாப்களில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி மேற்கண்ட மருத்துகளைக் கைப்பற்றினர். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதைப்பொருளாக தனி நபருக்கு அதிக அளவில் மருந்தை விற்றதாக சாமி நாயக்கன் மெடிக்கல் ஷாப் வைத்திருக்கும் சாஹுல் ஹமீது (62), இப்ராஹிம்(42), வேல்முருகன்(48) ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Image result for நகை திருட்டு பைக்