சபரிமலையில் விமானநிலையம்: மார்ச் 31-ம் தேதி முடிவு:

கேரள மாநிலம், சபரிமலையில் விமானநிலையம் அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த ஆய்வு அறிக்கை வரும் 31-ம் தேதிக்குள் தயாராகிவிடும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம், சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று பேசியதாவது:

பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் சீசன் நேரத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களின் வருகையை எளிதாக்கும் வகையில், விமான நிலைம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய லூயிஸ் பர்கர் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து இருந்தோம்.

இதற்காக எரிமேலி பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டில் 2,263 ஏக்கர் நிலம்அடையாளம் காணப்பட்டது.இந்த இடத்தில் விமான நிலையம் அமைந்தால், பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என ஆலோசனை கூறப்பட்டது.

இந்தநிலையில், செருவேலி பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், சாத்தியங்கள் குறித்த ஆய்வு முடிந்து, வரும் 31-ம்தேதி அறிக்கை அளிக்கப்படும். மேலும், மத்திய அரசிடம் இருந்தும் தேவையான அனுமதிகளை எதிர்பார்த்து இருக்கிறோம்.

வரும் 31-ம்தேதிக்கு பின் சபரிமலையில் கிரீன்பீல்ட் விமானநிலையம் அமைவதற்கான சாத்தியங்கள் தெரிந்துவிடும்Image result for airport