கோழிக்கோட்டில் அடுத்தடுத்து தங்கம் பறிமுதல்: வளைகுடா நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கைவரிசை

Image result for கோல்ட்துபாயிலிருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் வந்த 2 பெண்கள் உட்பட 5 பயணிகளிடமிருந்து ரூ.42.7 லட்சம் பெருமானமுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தை மறைத்து பொருட்களோடு பொருட்களாக கலந்து எடுத்துவந்துள்ளனர். விமான புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தபோது, ஐந்து பயணிகளிடம் இருந்து 1.3 கிலோ எடைக்கும் அதிகமான தங்கத்தை மீட்டனர்.

கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வுத்துறையினர் ரூபாய் 47.3 லட்சம் மதிப்புள்ள 1,5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதை அடுத்து மறுநாளே 1.3 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.Image result for கோல்ட்