‘காளியன்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஒப்பந்தம்

Related imageபிருத்விராஜ் நடிக்கவுள்ள ‘காளியன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

‘காளியன்’ என்ற வரலாற்றுப் படத்தில் நடிப்பதாக, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்தார் பிருத்விராஜ். 3,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குஞ்சிரக்கோட்டு காளி என்ற போர்வீரன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.Image result for காளியன்

இதில் காளியின் சேனாதிபதி ரவிக்குட்டி பிள்ளையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ். ‘பாகுபலி’யின் கட்டப்பா கதாபாத்திரம் போன்று, இதுவும் பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார் ‘காளியன்’ பட இயக்குநர் மகேஷ்.

‘கண்ணாமூச்சி ஏனடா’ படத்துக்குப் பிறகு பிருத்விராஜ் – சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பெரும் பொருட்செலவில் ‘காளியன்’ திரைப்படம் உருவாகவுள்ளதுImage result for காளியன்.