கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்

Image result for virat kohli battingஇந்திய கேப்டன் விராட் கோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட அனுமதிப்பது ‘நான்-சென்ஸ்’ என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்திய அணி நீண்ட தொடரை ஆடவிருப்பதால் அதற்கு முன் அங்குள்ள சூழலை நன்கு அறிய விராட் கோலி சரே அணிக்கு ஆடுவார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோலி இங்கிலாந்தில் எப்படி திண்டாடினாரோ அப்படியே அவரை விட்டு விட வேண்டியதுதான் அவருக்கு இங்கு நாம் ஏன் பயிற்சிக்களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸுக்கு பாப் வில்லிஸ் கூறியதாவது:Image result for virat kohli batting

அயல்நாட்டு வீரர்கள் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. விராட் கோலி இங்கிலாந்து மைதானங்களில் முன்பு போல் திண்டாட வேண்டும் சராசரி 30 ஆகவே இருக்க வேண்டும். உள்நாட்டிலேயே இங்கிலாந்து தோல்வியடைவதை நாம் விரும்பவில்லை. அனைத்து அயல்நாட்டு வீரர்களையும் நாம் தேவையில்லாமல் இங்கு ஆட அனுமதிக்கிறோம்.

அயல்நாட்டு வீரர்கள் ஆடுவதினால் இங்கிலாந்தின் இரண்டாம் நிலை அணி வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அரிதாகி வருகிறது. இங்கிலாந்து அணியை முன்னேற்ற வேண்டுமெனில் இங்கிலாந்தின் தகுதியுடைய வீரர்களுக்கு கவுண்ட்டி கிரிக்கெட்டில் வாய்ப்பளிப்பதே சிறந்த முறையாகும்Image result for virat kohli batting

மாறாக விராட் கோலிக்கு போட்டி ஒன்றிற்கு 5 இலக்க சம்பளம் அளிக்கப் போகிறார்கள், இதில் அவர் தன் திறமையையும் வளர்த்துக் கொள்வார், அதுவும் டெஸ்ட் தொடருக்கு முன்பாக, இது சுத்த நான்-சென்ஸ். கடந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை அந்த நிலையிலேயே அவரை விட்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் பாப் வில்லிஸ்.

ஆனால் சரே மகளிர் கிரிக்கெட் இயக்குநர் எபனி ரைன்ஃபோர்ட்-பிரெண்ட் கூறும்போது, “கோலி போன்ற பாக்ஸ்-ஆபீஸ் வீரர்கள் கவுன்ட்டி கிரிக்கெட்டில் கொஞ்சம் உற்சாகத்தை ஏற்படுத்துவார்கள். இதனைக் கொண்டாட வேண்டும். சிறந்த வீரர்கள் ஆட வேண்டும் என்பதுதான் முக்கியம் அது சரேவாக இருந்தால் அது அப்படித்தான்.

சங்கக்காரா இங்கு ஆடிய போது ஏற்பட்ட உற்சாகம் தற்போது விராட் கோலியினால் ஏற்படப்போகிறது, இதில் தவறொன்றுமில்லை என்று பாப் வில்லிஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.Image result for virat kohli batting