கவிதாயினி முதல் கல்வியாளர் வரை ‘ உலகத்தை திரும்பிபார்க்க வைத்த 10 இந்தியப் பெண்கள்

ஊர்வசி சாஹ்னி100 பெண்கள் இடம் பெறும் இப்பட்டியலில் இதுவரை 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும்.

இந்த வருடாந்திர தொடர், உலகம் முழுவதும் உள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதுடன், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என பெண்களை ஊக்குவிக்கிறது.

கவிதாயினி ரூபி கெளர், எழுத்தாளர் இரா திரிவேதி, பெண்ணுரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளரான ஊர்வசி சாஹ்னி ஆகியோரும் ”100 பெண்கள்” தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பத்து இந்திய பெண்கள் யார் என்பதை தெரிந்துக்கொள்வோம்

2 வயதான டாக்டர் ஊர்வசி சாஹ்னி ‘ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளை’ (Study Hall Educational Foundation) என்ற கல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.

பெண்ணுரிமை ஆர்வலரும், கல்வியாளருமான ஊர்வசி, 34 ஆண்டுகளாக சமூக சேவைகளிலும், பெண்களின் உரிமைக்காகவும் பணியாற்றிவருகிறார்.

“கல்வி என்பது மாற்றத்தை கொண்டு வருவதற்கான சக்திவாய்ந்த ஆயுதம், ஆனால் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய கல்வியிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்” என்கிறார் ஊர்வசி சாஹ்னி.

பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திகியின் தாய் மெஹ்ரூனிசா சித்திகியும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

‘கற்றலுக்கு வயது தடையில்லை’ என்கிறார் 65 வயதான குடும்பத்தலைவி மெஹ்ரூனிசா சித்திகி.

இரா திரிவேதி32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.

தன்னுடைய எழுத்தின் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைக்க முடியும், லாப நோக்கற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்.இரா திரிவேதி கூறுகிறார், “நம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டைவிட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தவர்கள் நாம். நமக்குள் உள்ள சக்தி அபரிதமானது. வெளியுலகத்திற்காக நம்மை நாமே சுருக்கிக்கொண்டால், நமது எல்லையற்ற திறமைகள் முடங்கிவிடும். நம்முடைய வரம்பற்ற திறன்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், உலகத்தில் இருந்து தனிமைப்பட்டுவிடுவோம்.”

தொழிலதிபர் மற்றும் ‘இம்பைப்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 35 வயதான அதிதி கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய விரும்புகிறார்.

“உலகில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரவேண்டும். அதற்காக, அதிதி அஸ்வதிநேர்மறையான புரட்சியை உருவாக்குவோம்” என்று அவர் கூறுகிறார்

6 வயதான பிரியங்கா ராய் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாணவி.

மேற்கு வங்க மாநிலம் ராணாகாடில் இருந்து ஒரு வருடம் முன்பு டெல்லிக்கு வந்த பிரியங்கா, இப்போது கோவிந்த்புரியில் உள்ள டி.ஏ. காலனியில் தனது தாயுடன் வசிக்கிறார்.

“மற்றவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். என் சொந்த கால்களில் நிற்க விரும்புகிறேன்” என்பது பிரியங்காவின் விருப்பம்.

1 வயதான நித்யா தும்மஷெட்டி ஃபார்சுன்பிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்.

சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் அதிபரான நித்யா, தொழில்நுட்ப நித்யா தும்மல்ஷெட்டிபடைப்பாற்றலின் மூலமாக கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாட்டை அழித்துவிடலாம் என்று கூறுகிறார்.

“தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும், பதில் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தொடர்ந்து கேள்வி கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டால், அநீதியும் பாகுபாடும் இயல்பானவை அல்ல என்பது புரிந்துவிடும்” என்று அவர் கூறுகிறார்.

ஆசிரியராக பணிபுரியும் 47 வயதான தூலிகா கிரண், சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த எட்டாண்டுகளாக டெல்லி திஹார் ஜெயிலில் குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அவர் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தவர்.

“உங்களை நேசிப்பவர்களை வெறுக்காதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஏமாற்றாதீர்கள்” என்கிறார் தூலிகா கிரண்.

ரூபி கெளர்கவிதாயினியும் எழுத்தாளருமான ரூபி கெளர், வாழ்வியல் தொடர்பான கருத்துகளை தனது எழுத்தில் பிரதிபலிக்கிறார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடா நாட்டை சேர்ந்த ரூபி கெளர், ஒரு ஓவியரும் கூட.

அன்பு, உடலுறவு, அதிர்ச்சி, சிகிச்சைமுறை, பெண்களின் பிரச்சினைகள் போன்ற பல விடயங்களை தனது படைப்புகள் மூலம் முன்வைக்கிறார்.மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணித் தலைவியான 34 வயது மிதாலி ராஜ், இந்த ஆண்டு 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை.

“நான் கனவு காண்பேன், கடுமையாக உழைப்பேன். எனக்கு திருப்தி ஏற்படும்வரையில் உழைத்துக் கொண்டேயிருப்பேன்” என்கிறார் மிதால் ராஜ்