கமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி

Related imageமுழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி உண்டு.

ஒரு காலத்தில் வச­தி­யுள்­ளோ­ருக்கு மட்டும் உரி­மை­யு­டை­ய­தாக இருந்த இணைய வசதி இன்று கைக்கடக்க­மாக சாதா­ரண கைய­டக்க தொலை­பே­சி­க­ளிலும் வலம் வரு­கின்­றது.

பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், வீ செட், டுவிட்டர், டங்கோ என சமூக வலைத்­த­ளங்கள் ஏராளம். இவை இன்­றைய மனி­தர்­களின் பொழு­து­போக்கு அம்­ச­மா­கவும், உற­வு­க­ளுக்கு இடையில் ஏற்­படும் சிறு சிறு இடை­வெ­ளி­களை குறைத்து இணைக்கும் பால­மா­கவும் உள்­ளது.

ஆனால், இவை­யெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்­த­ளங்­களை தமது பழி­வாங்­கு­தல்­க­ளுக்கும், இழி­வான செயல்­க­ளுக்கும் சிலர் பயன்­ப­டுத்­து­கின்­றனர்.

அதுவும் பெண்­களின் புகைப்­ப­டங்­களை, அந்­தரங்கக் காட்­சி­களை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வி­றக்கம் செய்து அதில் ஆனந்தம் காணும் அற்ப மனிதர் கூட்­டமும் இருந்து கொண்டே தான் இருக்­கின்­றது.

தந்தை. தம­யந்தி (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) இவளும் திரு­மணம் முடித்து மூன்று குழந்­தை­களின் தாய்.

இந்த நிலையில் ஹேமந்­த­வுக்கும் தம­யந்­திக்­கு­மி­டையில் இரு வரு­டங்­க­ளாக இர­க­சி­ய­மான முறையில் கள்ளத் தொடர்பு வளர்ந்து வந்­துள்­ளது.

இரு­வ­ருமே ஒரே கிரா­ம­மாக இருந்­த­ப­டியால் ஒரு­வரைப் பற்றி ஒருவர் நன்கு அறிந்­த­வர்­க­ளாக இருந்துள்ளனர்Image result for கள்ள காதல்.

இருந்த போதிலும் ஹேமந்த தன் மனை­விக்குத் தெரி­யா­மலும் தம­யந்தி தன் கண­வ­னுக்குத் தெரி­யா­மலும் இரு­வ­ருக்கும் இடை­யி­லான தகாத உற­வினைத் தொடர்ந்து பேணி வந்­துள்­ளனர்.

இனக் கவர்ச்­சி­யிலும், காம உணர்ச்­சி­க­ளிலும் திளைத்­தி­ருந்த இவர்களுக்கு அடுத்­தவர் தங்களைப் பற்றி தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை என்றே நினைத்தி­ருந்­தனர்.

எனினும் கிரா­மத்தில் இருந்த ஒரு சில­ருக்கு இவர்­களின் தொடர்பு தெரிந்தே இருந்­தது. அங்கு இங்கு கூடி அக்கம் பக்­கத்­தினர் அவ்­வப்­போது இது பற்றி பேசிக்­கொண்டே இருந்­தனர்.

ஹேமந்­தவை விட தம­யந்தி ஹேமந்­தவை மனப்­பூர்­வ­மாக காத­லித்து வந்­தி­ருக்­கிறாள். அதை­விட அவன் மீது அளவு கடந்த நம்­பிக்­கையும் வைத்­தி­ருந்­தி­ருக்­கிறாள்.

ஹேமந்த தனக்கு எக்­கா­லத்­திலும் துரோகம் செய்ய மாட்டான். தன்னை அவனும் காத­லிக்­கின்றான் என்று மனக் கோட்­டையை கட்­டி­யி­ருக்­கிறாள். எனினும் ஹேமந்த அவளின் நம்­பிக்­கையைப் பொய்யாக்கியுள்ளான்.

இரு வரு­டங்­க­ளாக ஒன்­றாகக் கூடி மகிழ்ந்­தவன் நாள­டைவில் அவளின் உறவில் சந்­தேகம் கொண்டான். அவள் தனக்கு தெரி­யாமல் வேறு எவ­ருடனாவது தொடர்பு வைத்­தி­ருக்­கலாம் என்று எண்­ணினான்.

எனவே சந்­தேகம் விப­ரீ­த­மான பல யோச­னை­களை அவன் தலைக்குள் திணித்­தது. தம­யந்தி எக்காலத்திலும் தன்னை மீறி எங்கும் எவ­ரி­டமும் சென்று விடக் கூடாது என்­ப­தற்­காக ஒரு தந்திரோபாயத்தைத் தீட்­டினான்.

அதற்­காக அவன் தீட்­டிய திட்டம் மிகவும் கீழ்த்­த­ர­மான, இழி­வான ஒரு செய­லாகும். அவன் தன் உற்ற நண்­ப­னான கயானின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) உத­வியை நாடி­யுள்ளான். கயான் வாக­னங்­களில் குளி­ரூட்­டி­களை திருத்தும் தொழில் செய்­பவன்.

ஹேமந்த கயா­னிடம் சென்று “மச்சான் நீ எனக்கு உன்­னு­டைய கெம­ராவை தா. நானும் தம­யந்­தியும் களுத்­து­றையில் ஒரு விடு­தியில் அறை ஒன்றை எடுத்து உல்­லா­ச­மாக இருக்கப் போகின்றோம். நாங்கள்

இரு­வரும் ஒன்­றாக இருக்கும் காட்­சியை நான் வீடியோ செய்து கொண்டு வரு­கின்றேன்” என்று தன் திட்டத்தை நண்­ப­னுக்கு கூறி நண்­ப­னிடமிருந்து கெம­ராவைப் பெற்றுக் கொண்டான்.

கயானும் ஆபாசப் படங்­களை இர­சித் துப் பார்க்கும் மனோ­நி­லையை கொண்­டவன் என்­பதால் அந்த ஆர்வத்தில் மறுக்­காமல் கெம­ராவைக் கொடுத்து விட் டான்.Image result for கள்ள காதல்

கெம­ராவை கையில் எடுத்த ஹேமந்த அடுத்த கட்­ட­மாக எப்­படி தன் திட்­டத்­துக்குள் தம­யந்­தியைப் பலியிடு­வது பற்றி யோசித்தான்.

அதன்­படி தமயந்திக்கு கைய­டக்கத் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டு “நீ என்­னோடு களுத்­து­றையில் உள்ள விடு­திக்கு வரு­வாயா? உன்­னோடு ஒரு நாள் பொழுதை கழிக்க ஆசை­யாக இருக்­கின்­றது” என்று அழைத்தான்.

அவளும் அவன் மீது உள்ள பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான நம்­பிக்­கையில் அவன் கூப்­பிட்­டதும் வரு­கின்றேன் என்று ஒத்துக் கொண்டாள்.

தனது திட்­டங்கள் அனைத்தும் நினைத்­தது போல் இனிதே நடை­பெற்று வரு­வதை எண்ணி அவ­னுக்குள் கொள்ளை இன்பம்.

திட்­ட­மிட்­ட­படி தம­யந்தி ஹேமந்­த­வுடன் களுத்­து­றை­யி­லுள்ள விடு­திக்கு வந்தாள். ஹேமந்த தவ­றாமல் கெம­ரா­வையும் கொண்டு வந்­துள்ளான். விடுதி அறைக்கு வந்­த­வு­டனே ஹேமந்த கெம­ராவை எடுத்து அதை இயக்­கு­வதை தம­யந்தி கண்­டி­ருக்­கின்றாள்.

எனினும் அவள் அதைப் பெரி­தாக எடுத்துக் கொள்­ள­வில்லை. எனவே கெம­ராவை இயங்கச் செய்து வீடியோ பதி­வாகும் வகையில் ஒரு மூலையில் வைத்து விட்டு இரு­வரும் உல்­லா­ச­மாக இருந்­தி­ருக்­கின்றனர்.

தம­யந்தி நிர்­வா­ண­மாக இருக்கும் காட்­சி­களும், இரு­வரும் ஒன்­றாக இருக்கும் படுக்கையறை காட்­சி­களும் அதில் பதி­வாகிக் கொண்டே இருந்­தன.

இத­னி­டையே ஹேமந்த கெம­ராவை எடுத்து ஏதோ செய்யத் திடீ­ரென தம­யந்­திக்கு ஹேமந்த மீது சந்­தேகம் எழ ஆரம்­பித்­தது. அடுத்­த­டுத்து கேள்விக் கணை­களை அவனை நோக்கித் தொடுத்தாள்

நீ இப்போ என்ன செய்­கின்றாய்?” என்று அவள் கேட்க, அவன் “கொஞ்சம் பொறு பொறு” எனக் கூறி­னானே தவிர அவள் கேட்கும் கேள்­வி­க­ளுக்கு பதில் சொல்­ல­வில்லை. எனவே தம­யந்­திக்கு சந்­தேகம் மேலும் அதி­க­ரிக்க, அவள் அவ­னோடு முரண்­பட ஆரம்­பித்­தி­ருக்­கின்றாள்.

தனது நிர்­வாண நிலையை அந்த கெமரா பதிவு செய்து விட்­டது. அதை நீக்கி விடு­மாறு ஹேமந்­த­விடம் அழுது புலம்பி மன்­றா­டினாள்.

எனினும் ஹேமந்த “இல்லை அப்­படி ஏதும் பதி­வா­க­வில்லை” என்று கூறி மறுத்து விட்டான். இறு­தியில் இரு­வரும் அறை­யி­லி­ருந்து வெளி­யேறி விட்­டனர். தம­யந்தி அழுது கொண்டு வீட்­டுக்கு சென்று விட்டாள்.

விடு­தி­யி­லி­ருந்து வந்த ஹேமந்த கெம­ராவைக் கொடுக்க தன் உற்ற நண்­ப­னான கயானை தேடிச் சென்­றி­ருக்­கின்றான்.

கயா­னிடம் “முழு­வ­தையும் எடுக்க கிடைக்­க­வில்லை எனினும் எடுத்த கொஞ்சம் இதில் இருக்­கின்­றது பார்” என்று கொடுத்­தி­ருக்­கின்றான். அது மட்­டு­மின்றி தன்­னு­டைய கைய­டக்கத் தொலை­பே­சிக்கும் அவற்றை அனுப்பி விட்டு கெம­ராவை கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.

விடு­தியில் நடந்த சம்­ப­வத்­தை­ய­டுத்து குழப்பமடைந்திருந்த தம­யந்தி ஹேமந்­தவின் பக்கம் தலை காட்டவே இல்லை.

அவனை விட்டு தூர வில­கியே இருந்தாள். குறைந்­தது ஒரு குறுந்­த­க­வலையேனும் அனுப்­ப­வில்லை. இதனால் ஹேமந்த தன்­னிடம் இருக்கும் வீடி­யோக்­களை வைத்து தம­யந்­தியை மிரட்ட ஆரம்­பித்தான்.

“என்­னிடம் விடு­தியில் எடுத்­த­வைகள் இருக்­கின்­றன அதை நான் இணை­யத்தில் வெளி­யிடப் போகின்றேன்” என மிரட்­டி­யுள்ளான்.

தன் கணவன் உயி­ருடன் இருக்க, தன்னை நம்பி மூன்று குழந்­தை­களும் இருக்க முறை­கே­டான தன் நடத்­தையால் ஏற்­பட்ட விப­ரீ­தத்தை எண்ணி இரவு பகலாய் கண்ணீர் விட்டழுதாள்.

இனி­மே­லா­வது தான் திருந்தி வாழ வழி பிறக்­காதா என எண்ணிப் புலம்­பினாள். எனினும் மேலும் மேலும் இச்­சம்­பவம் பல சிக்­கல்­க­ளையே தந்து கொண்டிருந்தன.

ஹேமந்த மட்­டு­மின்றி அவ­னுக்கு கெம­ரா­வினை கொடுத்த நண்பன் கயானும் நண்­ப­னுக்கு தெரி­யாமல் தம­யந்­தியை தொலை­பேசி யூடாக அச்­சு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கிறான்.

“நீயும் ஹேமந்­தவும் ஒன்­றாக அறை யில் இருந்த வீடியோக் காட்­சியை ஹேமந்த என்­னிடம் கொடுத்தான்.

இனி நீ நாங்கள் சொல்லும் இடத்­துக்கு வர வேண்டும். அப்­படி இல்லை என்றால் இந்த வீடி­யோவை நான் கிரா­மத்தில் உள்ள இளை­ஞர்­க­ளுக்கு காட்டி உன்னை அசிங்­கப்­ப­டுத்­துவேன் என்­றெல்லாம் மிரட்­டி­யுள்ளான்.

அந்த தொலை­பேசி அழைப்­பினைக் கேட்­டதும் தம­யந்தி பிரம்மை பிடித்­தவள் போல் இருந்­தி­ருக்­கிறாள். பயம் அவளை ஆட்­கொண்­டி­ருக்­கி­றது.

தொலை­பேசி அழைப்பில் மிரட்டல் விடுத்த கயான் குறு­கிய நாட்­க­ளுக்­குள்ளே ஹேமந்த மற்றும் தன் ஏனைய நண்­பர்­க­ளுடன் இணைந்து அந்த வீடியோ உட்­பட புகைப்­ப­டங்­களை இணை­யத்தில் பதி­வி­றக்கம் செய்­தி­ருக்­கிறான்.

என்ன தான் தம­யந்தி தடம் மாறிச் சென்றாலும் அவளும் ஒரு பெண் தானே. அவளின் சுய மதிப்­பையும், கௌர­வத்­தையும் இந்தப் படு­பா­விகள் இணை­யத்­த ­ளத்தில் அரங்­கேற்றி இன்பம் கண்டு விட்­டார்கள்.

இணை­யத்தில் படங்கள், வீடி­யோக்கள் அம்­ப­ல­மா­னதைத் தொடர்ந்து தம­யந்­தியால் முகம் கொடுத்து வீட்­டிலும், கிரா­மத்­திலும் இருக்க முடி­ய­வில்லை.

தன் கணவர் முகத்­தையும், பிள்­ளைகள் முகத்­தையும் பார்க்­கவே வெட்­கப்­பட்டாள். உல­கமே தன் நிர்­வாண கோலத்­தையும், தன் அந்­த­ரங்கக் காட்­சி­களையும் பார்த்­தி­ருக்­கி­றது இணை­யத்தில் என்ற வேத­னையால் நொறுங்­கிப்­போனாள்.

இனி­மேலும் பொறுக்க முடி­யாது என்று துணிந்­த­வளாய் பொலி ஸில் முறைப்­பாடு செய்­யவே பொலிஸார் சாட்­சி­யங்­க­ளுடன் குற்­ற­வா­ளி­களைக் கைது செய்­தனர்.

பொலிஸ் பொறுப்­ப­தி­காரி, ஹேமந்த மற்றும் அவ­னது நண்பன் கயான் தொடர்­பான தக­வல்­களைச் சேகரிக்க ஆரம்­பித்­த ­துடன் அவர்கள் இரு­வ­ரையும் பொலி ஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் விசா­ரித்­த னர்.

எனினும் பொலி­ஸாரின் விசா­ர­ணை­க­ளுக்கு முன்பே தந்­தி­ர­மாக இரு­வரும் தங்களின் கைய­டக்கத் தொலை­பே­சி­க­ளி லும் கண­னி­யிலும் இருந்த தம­யந்­தியின் நிர்­வாணப் படங்­க­ளையும், வீடி­யோக்­க­ளையும் நீக்கி விட்­டனர்.

எனவே பொலி­ஸாரின் விசா­ர­ணையின் போது “நாங்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை” என்று தாங்கள் செய்ய தவறை ஒப்புக் கொள்ள மறுத்­து விட்டனர்.

ஆயினும் இரு­வ­ருமே கெம­ராவில் இருந்­த­வற்றை நீக்கி விட மறந்­தி­ருந்­த­மையால் பொலி­ஸா­ருக்கு அது பெரும் சாட்­சி­யாக மாறி­யது.

இரு­வரும் இன்று தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த வீடியோ காட்­சி­களைப் பார்த்தால் இக்­குற்­ற­வா­ளி­களைக் காப்­பாற்ற எந்­த­வொரு வழக்­க­றி­ஞரும் ஆஜ­ராகக் கூட மாட்டார்கள் என்­பதே உண்மை. அந்த அள­வுக்கு மோச­மான காரி­யத்தை அவர்கள் செய்­தி­ருந்­தனர்.

இவ்­வா­றான சம்­ப­வங்கள் பெரும்­பாலும் இத்தகைய தவறுகளை செய்யும் பெண்­க­ளுக்கு சிறந்த பாட­மாக அமை கின்றது.

திரு­மணம் முடித்து மூன்று குழந்­தை­க­ளுக்கு தாயான ஒரு பெண்­ணுக்கு திரு­ம­ணத்தின் பின்னர் வரும் காதலை “காதல்”என்று சொல்லவே நா கூசு­கின்­றது. கோபம், பாசம், அழுகை, சிரிப்பு போன்ற மனித உணர்வு­களைப் போன்­றது தான் காமம் என்­பதும்.

ஆனால் அந்த உணர்­வு­களை சரி­யாக நெறிப்­ப­டுத்­து­வ­தற்­கா­கத்தான் பண்­பா­டு­களும், கலா­சா­ரங்­களும் இருக்­கின்­றன.

அது­மட்­டு­மின்றி ஒவ்­வொரு ஆணும் பெண்­க­ளுக்­கு­ரிய சுய கௌர­வத்­தையும் மதிப்­பையும் களங்­கப்­ப­டுத்தும் காரி­யங்­களில் ஈடு­படக் கூடாது.

இதே நிலைமை உங்கள் வீட்டுப் பெண்­ணுக்கு நிகழ்ந்தால் எப்­படி இருக்கும் என்று ஒரு தரம் சிந்­தித்துப் பாருங்கள்.

அத்­தோடு சமூக வலைத்­த­ளங்­களைப் பயன்­ப­டுத்தும் பெண்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­பது நன்று…..தம்மோடு சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பிலுள்ள நண்பர்களிடம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.