கனடா பிரதமருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு.. மத்திய அரசு புறக்கணிப்புக்கு பதிலடி

 ரஹ்மான் வாழ்த்துசென்னை: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார். டெல்லி வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கவில்லை என்பதோடு, வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் கூட தகவல் வெளியிடவில்லை. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு அளிப்பதாக மோடி அரசு அதிருப்தியில் இருப்பதாகவும், எனவேதான் அவர் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நமது தளத்தில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், தமிழக முதல்வர், கனடா பிரதமரை அழைத்து கவுரவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கைவிடுத்துள்ளார். இதேபோல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்று நேற்று டுவிட் வெளியிட்டுள்ளார்இந்தியாவுக்கு வருக, இங்கே வசிக்கும் தருணம் மறக்க முடியாததாயும், சிறப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்திய விருந்தோம்பலை நீங்கள் என்ஜாய் செய்வீர்கள் என கருதுகிறேன் என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.மத்திய அரசு புறக்கணித்துள்ளது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், இந்த டிவிட்டின் மூலம், மத்திய அரசின் செயலுக்கு ரஹ்மான் மறைமுகமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கும் ஆதரவானவர். பொங்கல் போன்ற தமிழர் பண்டிகைக்கு தமிழில் வாழ்த்து கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அசத்துபவர் என்பதால் தமிழர்களின் ஆதரவை பெற்றவர் இவர். தமிழர் நண்பர்