கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி : யேமனில் அதிசயம்!!

யேமனைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவர் அழும்போது கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

சாடியா சாலெஹ் என்ற மேற்படி சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது மருத்துவத்தால் விளக்க முடியாத மர்மமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன

மேற்படி சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த விநோத பாதிப்பு குறித்த செய்திகள் யேமனிய அஸால் செய்மதி தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது

.

அந்த சிறுமி சில மணித்தியாலங்களில் ஒரு சிறிய பெட்டி நிறைந்த கற்களை கண்களிலிருந்து வெளியேற்றுவதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்இந்நிலையில் மேற்படி சிறுமி வாழும் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஏதோ மந்திர சக்தி உள்ளதாக நம்புகின்ற அதேசமயம் வேறு சிலர் அவருக்கு ஏதோ நோய் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.