கணிதம், இயற்பியல் துறையில் இந்தியர்கள் திறமைசாலிகள்:மனம் திறந்து பாராட்டுஸ்டீபன் ஹாக்கிங்

Related imageஇந்தியர்கள் கணிதம், இயற்பியலில் திறமைசாலிகள்’’ என்று இங்கிலாந்தின் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

இங்கிலாந்தின் இயற்பியல் மற்றும் விண்வெளி துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நேற்று தனது 76-வது வயதில் காலமானார். கடந்த 2001-ம் ஆண்டு ஸ்டீபன் ஹாக்கிங், 16 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது, மும்பை, டெல்லியைச் சுற்றிப் பார்த்தார். அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினார்.

அப்போது, இந்தியர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் துறைகளில் மிக திறமைசாலிகள் என்று அவரிடம் ஹாக்கிங் மகிழ்ச்சியாக கூறினார். இந்தச் சந்திப்பு மறக்கமுடியாத அனுபவம் என்று நாராயணன் பின்னர் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ‘‘மனிதர்களின் நம்பிக்கை சின்னமாக, ஏதாவது ஒரு வகையில் குறைபாடு உள்ள மனிதர்களுக்கு ஊக்க சக்தியாக இருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்’’ என்று புகழாரம் சூட்டினார். ஹாக்கிங் பின்னாளில் கூறும் போது, ‘இந்திய பயணம் மிகச் சிறப்பாக இருந்தது’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அப்போது மும்பையில் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 5 நாட்கள் நடந்த சர்வதேச இயற்பியல் மாநாட்டில் பல அமர்வுகளில் ஹாக்கிங் உரை நிகழ்த்தினார். இந்திய பயணத்தின் போது தனது 59-வது பிறந்த நாளை தான் தங்கியிருந்த ஓபராய் டவர்ஸ் ஓட்டலில் கொண்டாடினார். சக்கர நாற்காலியுடன் இவர் மும்பை, டெல்லியை சுற்றிப் பார்க்க பிரத்யேகமான வாகனத்தை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தயாரித்து தந்தது. அதன் மூலம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், குதுப் மினார் உட்பட பல முக்கிய இடங்களை ஹாக்கிங் சுற்றிப் பார்த்தார்.

சிந்திக்கும் ரோபோக்கள்

உலகளவில் செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்கவும், சிந்திக்கும் திறனுள்ள ரோபோக்களை உருவாக்கவும் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பிபிசி-க்கு அளித்த பேட்டியின் போது, ‘‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கினால் மனித குலத்துக்கு பேரழிவாக அமையும்’’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் முக்கிய விஷயங்கள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே ஹாக்கிங் தொடர்ந்து எச்சரித்து வந்தார். பருவநிலை மாறுபாடு, செயற்கை நுண்ணறிவு, மக்கள் தொகை பெருக்கம், வேற்றுகிரகவாசிகளால் பூமிக்கு ஆபத்து உட்பட பல விஷயங்கள் குறித்து அவர் எச்சரித்துள்ளார்.Image result for ஸ்டீபன் ஹாக்கிங்

செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்தமாக மனிதர்களுக்கு மாற்றாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். பருவநிலை மாற்றத்தால் 2,600-ம் ஆண்டுக்குள் பூமி பெரும் நெருப்பு கோளமாக மாறிவிடும். அப்போது மனித இனம் இல்லாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். பருவநிலை மாற்றம், விண்கற்களின் தாக்குதல், மக்கள் தொகை பெருக்கத்தால் அடுத்த 100 ஆண்டுகளில் மக்கள் வேற்று கிரகங்களில் குடியேறும் நிலை உருவாகும் என்று ஹாக்கிங் நம்பினார்.

மேலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை, தொழில்நுட்பங்களில் பெரும் வளர்ச்சி ஆகியவை அணுஆயுத, ரசாயன போர்களுக்கு வழிவகுத்து நம்மை முற்றிலும் அழித்துவிடும். இந்த அசம்பாவிதத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.

பூமியில் மனிதர்கள் வாழ்வதை, தங்களது இருப்பை வேற்றுகிரகவாசிகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளுக்கு ஹாக்கிங் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், நம்மை விட வேற்றுகிரகவாசிகள் தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று அவர் நம்பினார்Image result for ஸ்டீபன் ஹாக்கிங்