என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலி

Image result for kashmir policeஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலியாயினர்.

ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் 5 நாட்களுக்கு முன்பு ஊடுருவியதாக ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டனImage result for kashmir police