எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே.. போட்டு உடைத்த மாஜி பிளேபாய் மாடல்!

அப்படீன்னா இருவருடன் உறவா?? வாஷிங்டன்: எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது என்று முன்னாள் பிளேபாய் பத்திரிகை மாடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை அலறடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.

சமீபத்தில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் இப்படித்தான் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறி கதி கலக்கியிருந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் கிளம்பியுள்ளார். இவர் பிளேபாய் இதழின் முன்னாள் மாடல் அழகி கரேன் மெக்டோகல்.கரேன் நியூயார்க்கைச் சேர்ந்தவர். தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006ம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக கூறியுள்ளார் கரேன். டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு குழந்தை பிறறந்த சில மாதங்களில் இந்த உறவில் குதித்தாராம் டிரம்ப்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர்பொய் பொய் பொய் , மெக்டோகலின் கூற்று பொய்யானது, போலியானது என்று அதிபர் டிரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்ஆனால் இந்த உறவு உண்மையானது என்று கூறியுள்ளார் கரேன். இதுகுறித்து அவர் கூறுகையில், 9 மாதம் இது நீடித்தது. நெருக்கமாக இருந்தோம். பின்னர் அந்த உறவு அப்படியே மெல்ல கரைந்து போனது என்று அவர் கூறியுள்ளார்
கரேன் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் டிரம்ப் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானியுடன் உறவில் ஈடுபட்டிருந்ததாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால் ஒரே நேரத்தில் இந்த இருவருடனும் டிரம்ப் நெருக்கமான உறவை பேணி வந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது9 மாதம் சேர்ந்திருந்தோம் .