எத்தியோப்பியாவில் பேருந்து விபத்து: 38 பேர் பலி

Related imageஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 38 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “எத்தியோப்பியாவில் லுகம்போ மாவட்டத்திலுள்ள அம்ஹரா மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் அப்பேருந்திலிருந்த 38 பேர் பலியாகினர். இதில் ஆண்கள் 28 பேர். பெண்கள் 10 பேர். பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து எத்தியோப்பியா போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்Image result for எத்தியோப்பியாவில் பேருந்து விபத்து: 38 பேர் பலி.