எடை இழப்பு உணவுகள்

konjakpflanze.jpgகொனியாக்-வேர் கிழங்கு, மாவில் தயாரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இல்லாத நூடுல்ஸ் குறைந்தளவு காபன்-சக்தி உள்ள பாஸ்தா-நூடுல்ஸ், பருமன் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய நலனுக்கு எவ்வளவு  தூரம் நல்லது ?
இந்த துரித உணவை, தயாரித்து வழங்கும் நிருவனம் அதில் ஜீரோ கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் பசை-புரதம் இல்லாத ஒரு நூடுல்ஸ் என அறிமுகம் செய்திருக்கின்றது, மேலும் இந்த பாஸ்தா-நூடுல்ஸ் சர்க்கரை  உயர்வை அரிதாக தூண்டுவதாக இருக்கலாம்.
இது போன்ற சூப்பர்-உணவுகள் ஒவ்வொரு நாளும் எங்கள் உணவுச் சங்கிலியில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றது, .இதுவும் ஒரு மூலையில் இருந்துட்டு போகட்டும், ஏனெனில் இதிலுள்ள அடிப்படை நேர்மை, உண்மைத்தன்மை பற்றி எனக்கு சரியாக தெரியாது,
நுகர்வோர் கவனக்-குறிப்பு:
– ஜீரோ கார்போஹைட்ரேட்.
– ஜீரோ சர்க்கரை.
– ஜீரோ பசை-புரதம்.
– ஜீரோ கொழுப்பு.
Image result for கருணை கிழங்கு
அங்ஙனம், நுகர்வோர் கவனக் குறிப்பில் எழுதப்பட்டது உண்மையாக இருந்தால் இன்சுலின் ஊசி செலுத்தும் நீரிழிவு நோயாளிகள்  மற்றும் ஹைபோ கிளைசீமியா-சர்க்கரைக் குறைபாடு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்று காரணம் சொன்னால், கார்போஹைட்ரேட் இல்லாத ஒரு நூடுல்ஸ்  என்பதினால் அதில் குளுக்கோசு பிளப்பு நடை பெறாது,
இவ்விதமாக கட்டுப்பாடற்ற சர்க்கரை இறக்கம், கடும் பசி, அவ்விதமாய் வரும் மயக்கம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது, உண்பதற்கு முன் சற்று ஆலோசியுங்கள்.    ..  நன்றி  மகேஷ்-இரவி  எசன்-நகரம்Related image