உலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது

625.0.560.350.160.300.053.800.668.160.90 (16)  உலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது! 625உலகிலேயே வன்முறை அதிகம் நிலவும் நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவிலுள்ள Los Cabos முதலிடம் பிடித்துள்ளது.

ஒரு நகரில் வாழும் 100,000 பேரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில், Mexican Anti-Violence think-tank Seguridad, Justicia Y Paz ஆகிய அமைப்புகள் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மெக்சிகோவின் Los Cabos முதலிடம் பிடித்துள்ளது, இரண்டாம் இடத்தைப் பிடிப்பது Venezuelaவிலுள்ள Caracas, மூன்றாம் இடத்திலிருப்பது Acapulco நகரம்.

அமெரிக்காவில் St Louis, Baltimore, New Orleans மற்றும் Detroit, மேலும் தென்னாப்பிரிக்காவில் Cape Town, Durban மற்றும் Nelson Mandela Bay ஆகிய நகரங்களும் முதல் 50 இடங்களுக்குள் வந்துள்ளன.

Jamaica, Honduras, Puerto Rico, Colombia, El Salvador மற்றும் Guatemala ஆகிய நகரங்களும் தப்பவில்லை.

17 முரட்டு நாடுகளுடன் பிரேஸில் முதலிடத்தில் நிற்கிறது, மெக்சிகோ, Venezuela மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதைப் பின் தொடர்கின்றன.

பட்டியலில் கீழிறங்கியிருக்கும் நாடு Honduras. அரசு வன்முறையை ஒடுக்க எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக இந்த முன்னேற்றம் காணப்படுகிறது.

Cumaná மற்றும் Gran Barcelona ஆகிய நகரங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் வன்முறை குறைந்துவிட்டது என்று தவறாக எண்ணி விட வேண்டாம். அந்த நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தக்கூட முடியாத அளவுக்கு வன்முறை தலைவிரித்து ஆடுவதால்தான் அவை நீக்கப்பட்டன.