உப்பில்லா உணவை உண்டு விரதமிருந்தால் திருமண பாக்கியமருளும் உப்பிலியப்பர்

இரு மனங்கள் இணையும் வைபவமே திருமணம். ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று சொல்லக் கேட்டிருப்போம்.

நமக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தால்தான், நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும்.

எப்படி ஒரு பயிருக்கு உரமிட்டால், அது நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ அப்படி அன்பு, நல்ல பண்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தால்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும்.

உப்பிலியப்பர் அருளால் திருமணம் நடைபெற நாம் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் மற்றும் மந்திரங்களைப் பார்ப்போம்.

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. இல்லறத்தின் தொடக்கம்தான் திருமண வைபவம்.

திருமணத்தின் மூலம் சிறப்பான வாழ்க்கைத்துணை நமக்கு அமையவேண்டுமானால், இறைவனின் அருள் நமக்குத் தேவை. இன்றைக்குப் பல்வேறு காரணங்களால் பலருக்கும் திருமணம் நடைபெறுவதில் தடை, தாமதம் ஏற்படுகிறது.

திருமணம் தடைப்படும் பெண்கள், தினமும் காலையில் நீராடி, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளை மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டு, ஶ்ரீவேதாந்த தேசிகர் அருளிய ‘பாதுகா சஹஸ்ரம்’ ஸ்தோத்திரத்தில் உள்ள கீழ்க்காணும் மந்திரத்தைப் பாராயணம் செய்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறும். இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும்Image result for உப்பிலியப்பர்! KOVIL.