இனி ஆஸ்திரேலியாவுக்காக களமிறங்க முடியாது என்பது என் இதயத்தை நொறுக்குகிறது: கனத்த இதயத்துடன் வார்னர் பேட்டி

Image result for smith and warnerபால் டேம்பரிங் விவகாரத்தில் சூத்திரதாரியாகச் செயல்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து தடை விதிக்கப்பட்ட முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னர், தன்னுடன் வீரர்கள் இனி களம் காண மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாகவும் இனி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடவே முடியாது என்றும் கனத்த இதயத்துடனும் கண்ணீரை அடக்கியபடியும் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, சக வீரர்கள், கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா, தன் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், ரசிகர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.Image result for smith and warner

பல கேள்விகளுக்கு வார்னர் பதிலளிக்கவில்லை, ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் தனது ட்விட்டரில், “விடையளிக்காத கேள்விகள் உள்ளன என்பது எனக்கு தெரியும். நான் முழுதும் புரிந்து கொள்கிறேன். காலத்தில் நான் அனைத்தையும் விளக்குகிறேன். இப்போதைக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன் தீர்மானிக்கப்பட்ட நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

முறையான இடத்தில் தகுந்த நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பேன். நான் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்க வேண்டும். இதனைத் தெளிவு படுத்தாதற்கு மன்னிக்கவும். என் கிரிக்கெட்டுக்கும், குடும்பத்துக்குமான விஷயங்கள் இதில் ஏகப்பட்டது அடங்கியிருப்பதால் நான் நடைமுறை விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

பேட்டியில் அவர் கூறியதாவது:Image result for smith and warner

நான் மதிக்கும், நேசிக்கும் என் சக வீரர்களுடன் நான் இனி களமிறங்க முடியாது என்பதை நினைக்கும் போது என் இதயம் உடைந்து நொறுங்குகிறது. நான் அவர்களுக்கு இழிவு தேடித்தந்து விட்டேன்.

அடுத்து என்ன என்பது எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. முதலில் என் குடும்ப நலம் முக்கியம்.

ஆனால் என் மனதின் எங்கோ ஒரு மூலையில் என்றாவது ஒருநாள் நான் மீண்டும் என் நாட்டுக்காக ஆடுவேன் என்ற நம்பிக்கைக் கீற்று தெரிகிறது. ஆனால் நான் இனி ஆட முடியாது என்ற உண்மையை உணர்ந்தேயிருக்கிறேன். வரும் வாரங்களில் இது எப்படி நடந்தது ஒரு மனிதனாக நான் யார் என்பதைப் பற்றி சிந்திப்பேன்.

ஆனால் இதனை நான் எப்படி அணுகப் போகிறேன் என்பது பற்றி இப்போதைக்கு என்னிடம் எந்த ஒரு கருத்தும் இல்லை. அனுபவஸ்தர்களிடம் நான் அறிவுரை கேட்டு என்னில் நான் நிறைய மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டியுள்ளது.

நான் என்குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக என் மனைவி மற்றும் குழந்தைகள். உங்கள் அன்புதான் எனக்கு அனைத்திலும் முக்கியமானது. நீங்கள் நான் ஒன்றுமில்லை. உங்களை இந்த நிலைக்குத் தள்ளியதற்காக வருந்துகிறேன். என்ன நடந்ததோ அதற்கு முழுப்பொறுப்பேற்கிறேன். நான் எதில் ஈடுபட்டேனோ அதன் விளைவுகளுக்காக மிக ஆழமாக வருந்துகிறேன். ஒரு துணைக் கேப்டனாக என் பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்.Image result for smith and warner

நியூலேண்ட்ஸ் கேப்டவுன் 3-ம் நாள் ஆட்டத்தில் நடந்த விஷயத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன். நான் உண்மையில் வருந்துகிறேன், என்னை மன்னியுங்கள். நான் செய்த அந்தக் காரியம் என் வாழ்நாள் முழுதும் பெரிய கறையாகத் தொடரும் என்பதை அறிந்திருக்கிறேன்.

அடுத்த 12 மாதங்கள் ஆட முடியாது என்பது மிகவும் கடினமாக உள்ளது, மற்ற வீரர்கள் மட்டுமல்ல ஸ்டீவ், பேங்கிராப்ட் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த முடிவு மிகவும் வருந்தத்தக்கது, மன்னிப்பற்றது.

கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கூறுகிறேன், நான் உங்களை ஏமாற்றியதற்காக என்னை மன்னியுங்கள். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

கிரிக்கெட் ரசிகரோ இல்லையோ அனைத்து ஆஸ்திரேலியர்களும் என்னை மன்னிக்க வேண்டும். என் செயல் என் நாட்டின் செல்வாக்கின் மீது ஏற்படுத்திய தாக்கத்துக்கு நானே பொறுப்பு. கிரிக்கெட் மூலம் நாட்டுக்கு பெருமை சேர்க்கவே எண்ணினேன் அதற்காகத்தான் எதையோ செய்யப்போய் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. இதற்காக நான் வாழ்நாள் முழுதும் வருந்துவேன்.

நாங்கள் மிக Image result for smith and warnerமோசமான முடிவை எடுத்து நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டோம். இன்று இங்கு உட்கார்ந்து கொண்டு இவ்வாறு பேசுவது வருத்தத்தை அளிக்கிறது, காரணம் அங்கு ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியில் ஆடிக்கொண்டிருக்கிறது, அதில் நாங்கள் ஆடியிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது காயமேற்படுத்துகிறImage result for smith and warner