இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது

Image result for tamilaga rail mariyal porattamகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் 500-க்கும் அதிகமானோர் சென்னை பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் நேற்று காலை 10 மணி அளவில் அரக்கோணம் – சென்னை சென்ட்ரல், ஆவடி – சென்னை சென்ட்ரல் இடையே யான மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மறியல் காரணமாக ரயில் பயணிகள் சிரமத்துக்குள்ளானார்கள். பின்னர் முத்தரசன் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டு புளியந்தோப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப் பட்டனர்.Image result for tamilaga rail mariyal porattam

இப்போது செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் லாபத்துக்காக தமிழகத்துக்கு பாஜக துரோகம் செய்துள்ளது. காவிரி பிரச்சினைக்காக அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒரு கபட நாடகம்.

மக்களவையில் 37 எம்பிக்களைக் கொண்டுள்ள அதிமுக, மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து தப்பிக்க பாஜகவுக்கு உதவி செய்வதற்காகவே அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். பிரதமர் மோடி நடத்தும் நாடகத்தில் அதிமுகவினர் நடிக்கின்றனர்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் காக்க ஏப்ரல் 5-ல் நடக்கும் முழு அடைப்புப் போராட்டத்தை அனைத்துத் தரப்பினரும் பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.தமிழக பாஜக தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அக்கட்சியினர் டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றார்.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்பி லிங்கம், திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் வை.சிவபண்ணியம்,கே. உலகநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்Related image.