இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த பெண் துணை விமானி மரணம்..!!

Image result for inthiya ranuvamமகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம் முருட் பகுதியில் கடந்த 10ந்தேதி இந்திய கடலோர காவல்படையை சேர்ந்த சீட்டாக் ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

ஹெலிகாப்டரின் இயந்திரம் நடுவானில் செயலிழந்த நிலையில் கடலில் விழுந்து விடாமல் இருக்க கரையை நோக்கி அதனை விமானி மற்றும் துணை விமானி செலுத்தினர். தரையில் மணலில் இறங்க மேற்கொண்ட முயற்சி பலனின்றி பெருங்கற்கள் நிறைந்த பகுதியில் மோதி நின்றது.

அதன் துணை விமானி பென்னி சவுத்ரி ஹெலிகாப்டரில் இருந்து முதலில் இறங்கியுள்ளார். இதில், மெதுவாக சுழன்ற ஹெலிகாப்டரின் காற்றாடி அவரது ஹெல்மெட்டில் பட்டுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பென்னி மும்பையில் உள்ள ஐ.என்.எச்.எஸ். அஸ்வினி கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் 17 நாட்கள் தொடர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் மரணம் அடைந்து உள்ளார்Image result for indian air force