இந்தியில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’ கடந்த வருடத்தின் சிறந்த படம்

Image result for விக்ரம் வேதாமாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் – காயத்ரி இயக்கிய இந்தப் படத்தை, ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரித்தார். சாம் சி.எஸ். இசையமைத்த இந்தப் படம், 100 நாட்களைக் கடந்து ஓடியது.

‘விக்ரம் வேதா’ படத்தை, வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலரும் முயன்றனர். ஆனால், அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த சஷிகாந்த், தற்போது தானே இந்தியில் ரீமேக் செய்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் பிளான் சி ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

புஷ்கர் – காயத்ரியே இந்தியிலும் இயக்கவுள்ளனர். ஆனால், எந்த நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார்கள்.Image result for விக்ரம் வேதா