இந்தியா வந்துள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு வலது கையில் எலும்புமுறிவு

Image result for ஹிலாரி கிளிண்டனுக்குஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு சிறிய அளவில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து ஜோத்பூர் தனியார் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தது:

ஜோத்பூர் கோயல் மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் ஹிலாரி கிளிண்டன் சேர்க்கப்பட்டார். காயம் ஏற்பட்டுள்ள அவரது வலுது கையில் சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ் ரே ஆகிய சோதனைகள் நடத்தப்பட்டன.

ஹிலாரியின் வலது கை மணிக்கட்டுப் பகுதியில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, அதன் அடிப்படையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. செயல்படத்தக்க வகையில் தற்காலிக சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12ம் தேதி மத்திய பிரதேசத்தில் மாண்டு பகுதியின் இயற்கைக் காட்சிகளைக் காணச்சென்ற போது அவரது கையில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது என்று கோயல் மருத்துவமனையின் இயக்குநர் ஆனந்த் கோயல் தெரிவித்தார்.

ஜோத்பூரில் உள்ள உமாத் பவன் பேலஸ் ஹோட்டலில் அவர் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனImage result for ஹிலாரி கிளிண்டனுக்கு INDIAN VISIT.