இந்தியாவில் தினமும் 6.25 லட்சம் சிறுவர்கள் புகைப்பிடிக்கிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Image result for குழந்தை SMOKINGஇந்தியாவில் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்கு கீழ்) தினமும் சிகரெட் புகைப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் புகையிலை பயன்பாடு தொடர்பாக அமெரிக்க புற்றுநோய் மையம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் சுமார் 9 கோடியே 3 லட்சம் ஆண்களும், 1 கோடியே 93 லட்சம் பெண்களும் தினமும் புகைப்பிடிக்கின்றனர். அதேபோல், 17 கோடியே 10 லட்சம் பேர் நாள்தோறும் சிகரெட் அல்லாத புகையிலையை பயன்படுத்துகின்றனர். சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் சிறுவர், சிறுமியர் தினமும் புகைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 4 லட்சத்து 29 ஆயிரம் பேர் சிறுவர்கள், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் சிறுமியர் ஆவர்.

ஒவ்வொரு வாரமும் புகையிலை தொடர்பான நோய்களால் இந்தியாவில் 17,887 பேர் உயிரிழக்கின்றனர். இது மிகவும் தீவிரமிக்க பிரச்சினை என்பதால், இந்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு புகையிலைப் பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Image result for குழந்தை SMOKING