ஆவடி அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 147 பேர் மீட்பு

Image result for chennaiஆவடி அருகே தனியார் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 147 பேர் மீட்கப்பட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பாண்டேஸ்வரம் பகுதியில் தனியார் செங்கற்சூளை ஒன்று உள்ளது. இந்த செங்கல் சூளையில் வடமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள தனியார் செங்கற்சூளையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வின்போது, சத்தீஸ்கர் – ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 63 ஆண்கள், 49 பெண்கள் மற்றும் 35 குழந்தைகள் என 147 பேர் கொத்தடிமைகளாக செங்கற்சூளையில் பணிபுரிந்தது தெரியவந்தது.அந்த 147 பேரையும் மீட்ட அதிகாரிகள், அவர்களை திருநின்றவூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை டுத்துள்ளது.

]இந்நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி ஓரிரு நாளில் தலா ரூ.20 ஆயிரம் மறுவாழ்வு நிதி அளிக்கப்பட்டு, அவர்கள் சத்தீஸ்கர் மாநிலம் – ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.உரிமையாளர் கைதுதனியார் செங்கற்சூளையில் வடமாநிலத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது தொடர்பாக முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று செங்கற்சூளை உரிமையாளரான சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகையா என்பவரை கைது செய்துள்ளனர்.Image result for ஆவடி அருகே தனியார் செங்கல் சூளையில்