அரசமைப்பு சாசனம் திருத்தப்படும்: மியான்மர் புதிய அதிபர் உறுதி

மிImage result for மியன்மார்யான்மரின் அரசமைப்பு சாசனம் திருத்தப்படும் என்று அந்த நாட்டின் புதிய அதிபர் வின் மையிண்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்நாட்டின் விடுதலைப் போராட்ட தலைவர் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது. அவர் வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை.

சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் அதிபர் பதவியேற்றார். உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் அவர் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 28-ம் தேதி புதிய அதிபராக வின் மையிண்ட் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் அவர் நேற்று முதல்முறையாக பேசியபோது, “ராணுவத்தால் வரையறுக்கப்பட்ட அரசமைப்பு சாசனம் திருத்தப்படும். இதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெறும். மனித உரிமைகள் காக்கப்படும்” என்று தெரிவித்தார்.Image result for மியன்மார்

அரசமைப்பு சாசனத்தை திருத்துவதன் மூலம் ஆங் சான் சூகி நாட்டின் அதிபராக பதவியேற்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மியான்மர் நாடாளுமன்றத்தின் 25 சதவீத இடம் ராணுவ பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படுகிறது. அரசமைப்பு சாசனம் திருத்தப்படும்போது ராணுவத்துக்கான ஒதுக்கீடு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.Image result for மியன்மார்